காலத்தின் தேவையாக இந்தப் புத்தகம் என் கண்களில் பட்டது! நம்மில் பெரும்பாலோருக்கு வெள்ளைக்காரன் கிறிஸ்துவனாக இருந்ததால்,இங்குள்ள கிறிஸ்துவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் அவ்வளவாகப் பங்கெடுத்திருக்க வாய்ப்பில்லை என பொதுவான ஒரு புரிதல் உள்ளது! ஏனென்றால் வெள்ளைக்காரனால் தான் இங்குள்ள கிறித்துவர்களுக்கு கல்வி பெறும் வாய்ப்பு,அரசாங்க வேலை,சமூக அந்தஸ்து என பல விஷயங்கள் சாத்தியமானது! ஆன போதிலும் கூட,மேலை நாட்டுக் கல்வியால் கிடைத்த சுந்திரஉணர்வு,ஜனநாயகப்பண்பு,சமத்துவ கோட்பாடு ஆகியவை இயல்பாக அவர்களுக்குள் ஒரு விடுதலை வேட்கையை ஏற்படுத்தி,பிரிட்டிஷாருக்கு எதிராகவே போராட வைத்துள்ளது என்பதை அறியும் போது சிலிர்ப்பு ஏற்பட்டது! ...