”இவர்கள் எங்கள் சிறந்த அடிமைகள்! நாங்கள் எவ்வளவு ஏறி மிதித்தாலும், எட்டி உதைத்தாலும் கெஞ்சுவார்கள், முணுமுணுப்பார்கள். எய்தவனைத் தவிர்த்து அம்பைத் தான் நொந்து கொள்வார்கள்” என்ற பாஜகவின் அனுமானத்தை தகர்க்க அதிமுகவினரும் சில உண்மைகளை பேசினாலே போதும். இதோ சில ஐடியாக்கள்: உலகத்தில் பரிதாபத்திலும் அதிக பரிதாபத்துக்கு உரியவர்களாக இன்று அதிமுகவினர் நிலை உள்ளது! ஐ.பி.எஸ் அண்ணாமலை ஒரு முறை காலால் நெஞ்சில் எட்டி உதைக்கிறார். அடுத்த முறை மூஞ்சியை நோக்கி கும்மாங்குத்து விடுகிறார்! இவை போதாது என காறித் துப்புகிறார் அதிமுகவினர் மீது! ...