ஏற்கனவே தலையில் பல கீரிடங்களை சுமக்கும் இளையராஜாவை இன்னும் சிலர் திட்டமிட்டு  ஏத்தி விடுகிறார்கள்! இளையராஜா ஒரு இசை மேதை தான்! இளையராஜாவுக்கு இணையான இசை மேதைகளே கிடையாதா..? ”அவர் அனைவருக்கும் மேலானவர்” என ஒருதரப்பு அடித்து பேசுவது எதனால்..? அதன் பின்னணி என்ன? திரை இசைத்தட்டு விற்பனை நிறுவனங்களுக்கும், இளையராஜாவிற்கும் அந்தக் காலம் தொடங்கி மோதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தன் திரை இசை பாடல்களுக்காக தயாரிப்பாளரிடம் ஊதியமும், அதைத் தொடர்ந்து ராயல்டியையும் பெற்று வரும் இளையராஜா, படத் தயாரிப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை ...