வடசென்னை முற்றிலும் வாழத் தகுதியற்ற இடமாகிவிட்டது! அங்குள்ள மனிதர்களை அரசும், தனியார் நிறுவனங்களும் ‘வோர்க்கிங் சோர்ஸ்’ ஆகத் தான் பார்க்கிறார்களே அன்றி, மனிதர்களாகப் பார்ப்பதில்லை.  25 ஆபத்தான தொழிற்சாலைகள் அணிவகுக்கும் பகுதி! ஒன்றடுத்து ஒன்றென பல விபத்துக்கள் வாடிக்கையாகிவிட்டதே..! எத்தனை கோர அனுபவங்கள் கிடைத்தாலும், முன்கூட்டியே செய்ய வேண்டிய அடிப்படையான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளைக் கூட, எப்போதும் செய்வதில்லை என தனியார் நிறுவனங்கள் பிடிவாதம் செய்கின்றன. அவர்களை கண்காணித்து வழிக்கு கொண்டு வர வேண்டிய அரசின் மாசுக் கட்டுபாடு வாரியமோ, காசு கலெக்‌ஷன் வாரியமாக, ...