“தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” என்பதற்கு இன்னும் எத்தனை காலம் போராடப் போகிறோம்? ஏன் நடைமுறைப்படுத்த முடியவில்லை? என்ன தடைகள்? யாரால் இந்தப் பின்னடைவு? என்ன செய்யப் போகிறோம்? தீர்வு என்ன? அனைத்தையும் அலசியது இந்தக் கருத்தரங்கம்! சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் – தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் “தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு குழப்பமான தீர்ப்பை தந்துள்ளது. ...