தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கற்பித்தலும் – கற்றலும் சுதந்திரமாக நடைபெறுவதில்லை. ஆசிரியர்களை பாடம் நடத்தவிடாமல் ஆட்டுவிப்பது தான் பள்ளிக் கல்வித் துறையின் அணுகுமுறையா? வெவ்வேறு பெயர்களில் ஆபத்தான தேசிய கல்வித் திட்டத்தை பள்ளிகளில் திணிப்பதா..? அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி ஆவேசம். கொரோனா காலத்தில் மாணவர் கற்றலில் தற்காலிகமாக கொண்டு வரப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தையே இன்னும் தொடரச் செய்வதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் ஆசிரியர்கள். பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு கல்வித்துறை எமிஸ் (EMIS) ...