சபாஷ்! அதிகார மமதையில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய ஆளுநரை சரமாரியாக கேள்விகள் கேட்டனர் நீதிபதிகள்! அவரது உள் நோக்கங்களை அம்பலப்படுத்தினர் ! சிறந்த முறையில் அறிவுறுத்தல்கள் தந்தனர்… எனத் தற்காலிக சந்தோஷத்தை கடந்து, இந்த வழக்கினால் வேறு முன்னேற்றம் உண்டா? செய்ய வேண்டியது என்ன? ஆளுநர்கள் அரசியல் சட்டத்தை மீறி, மக்களாட்சியின் மாண்புகளை மீறி செயல்படுவதால், மாநில அரசின் செயல்பாடுகள் முடங்குவதால், விழிபிதுங்கி மாநில அரசுகள் மீண்டும், மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதும், மீண்டும், மீண்டும் நீதிபதிகள் ஆளுனருக்கு கண்டனம் மற்றும் அறிவுறுத்தல்கள் தருவதுமாக.. போய்க் ...