தினத்தந்தி, ராணி, ராணிமுத்து இதழ்களின் முன்னாள் ஆசிரியரும்,பல இதழியல் வரலாற்று நூல்களின் ஆசிரியருமான அ.மாரிசாமி என்ற அ.மா.சாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி தமிழ் இதழியல்துறைக்கும்,தமிழ் வாசகர்பரப்புக்கும் பேரிழப்பாகும். அ.மா.சாமி அவர்கள் வேறு யாரும் சிந்தித்துப் பார்த்திராத வகையில் இந்திய மற்றும் தமிழ் இதழியல்வரலாற்றை ஆவணங்களுடன் எழுதி பதிவு செய்தவர். தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி திராவிட இயக்க இதழ்கள் நாம் தமிழர் இயக்கம் வரலாறு படைத்த தினத்தந்தி திருக்குறள் செம்பதிப்பு தமிழ் இதழ்கள் வரலாறு இந்திய விடுதலைப் போர் செந்தமிழ் தந்த சீர் இந்து ...