பாஜக எப்போதுமே உடனடி அரசியல் ஆதாயத்தை சிந்திக்காது. தொலை நோக்கில் தான் அடி எடுத்து வைக்கும். சிவசேனாவை பிளந்து ஏக்நாத் சிண்டேவை முதல்வர் ஆக்கிவிட்டாலும், உண்மையில் நிழல் முதல்வாராக இருக்க போகிறவர் பிராமணரான தேவேந்திர பட்னாவிஸ் தான்! அதிருப்தியாளர்களுக்கே அரியணையை பரிசளித்தன் மூலம் மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏக்களில் தற்போது 40 பேர் ஏக்நாத் வசம் வந்துள்ள நிலையில், இது மேலும் கூட வாய்ப்புள்ளது. ” பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வாராவார்” என பரவலாக பேசி கொண்டாடப்பட்டு வந்த நிலையில், பாஜக விலகி நின்று ...