தூக்கமின்மை…! இன்றைய சூழலில் நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினை. தூக்கமின்மைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை தவிர்ப்பது, தூக்கத்தை வரவழைக்கும் உணவுகளை உண்பது, இவற்றுடன் சில வாழ்வியல் முறைகளைக் கடைபிடித்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்! வயது வித்தியாசமில்லாமல் பலரையும் பீடித்திருக்கும் இந்த தூக்கமின்மையைப் போக்க பலரும் பல்வேறுவிதமான வழிகளை பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். தூக்கமின்மை குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டால் கொட்ட கொட்ட கண் விழித்து பல இரவுகள் தூங்காமல் கண் விழித்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்தால் உள்ளபடியே ...