ஒட்டுக் கேட்டு, உளவு பார்த்ததை ஊத்தி மூட திட்டமிடுகிறார்கள் போலும்! எத்தனையெத்தனை தடங்கல்கள்! தயக்கங்கள்! விசாரணை என்ற பெயரில் காலத்தை விரயமாக்கிவிட்டு, அதிகார பலத்தால் உண்மையை அஸ்தமிக்க செய்ய ஒன்றிய பாஜக அரசு ஓரங்க நாடகம் நடத்தி வருகிறதா…? ஜனவரி 2022ல் நியூ யார்க் டைம்ஸ்  NEW YORK TIMES  பத்திரிக்கையில் ஒரு ஆணித்தரமான செய்தி வந்தது. “இந்தியா 2017ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டுடன் பாதுகாப்பு சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் போட்டது, அதில் பெகாசஸ் உளவு சாதனத்தை பல நூறு கோடி டாலர்கள் கொடுத்து வாங்குவதற்கு இந்திய ...