அரசியலில் எவ்வளவு அம்பலப்பட்டாலும், தலைமைகள் வீழ்வதில்லையே…? பொன்னையன் ஆடியோ விவகாரத்தில் எடப்பாடியின் யோக்கியதை கிழித்து தொங்க விடப்பட்டுள்ளது. எடப்பாடியின் தலைமை தொடர்வதை கேள்வியாக்கியுள்ளது. எனினும், அறவுணர்வு இல்லாத சமூகத்தில், இதெல்லாம் என்னவாகும்? ”யார் இவர்? இது வரை மக்களுக்கு பெரிய அளவில் அறிமுகமில்லையே!” என ஐந்தாண்டுகளுக்கு முன்பு எடப்பாடி முதல்வரான போது அதிசயப்பட்டனர் மக்கள்! ஆனால், அந்த எடப்பாடி பழனிச்சாமி, யாருமே எதிர்பார்க்க முடியாதபடிக்கு தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார்! அவர் முதல்வரானது கூட ஆச்சரியமானதல்ல, ஏனென்றால், அது சசிகலா அவருக்கு ஏற்படுத்தி ...