நாத்திகம் எப்போது உருவானது…? என்ற கேள்வியை ஆத்திகம் எப்போது உருவானது…? என்று மாற்றிக் கேட்பதே சரியாக இருக்கும். ஆதி மனிதன் இயல்பில் கடவுள் குறித்த சிந்தனைகள் தோன்றினவா? சித்தர்களில் பலர் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தது எப்படி? கடவுள் யாரால், ஏன், எப்போது தோற்றுவிக்கப்பட்டார்…? கடவுளை நம்புபவர் ஆத்திகர் என்றும், கடவுளை நம்பாதவர் நாத்திகர் என்ற கருத்து இவ்வளவு நாள் திணிக்கப்பட்டு வருகிறது. இது கடவுளை முன்னிறுத்தியவர்கள் செய்து வந்த வேலையாகும். கடவுள் மறுப்பை நாத்திகம் என்றால், கடவுள் நம்பிக்கையை அநாத்திகம் என்பதே சரியானதாகும். இப்போது ...

”சனாதனம் என் கொள்கை. அதற்காக பதவி விலகவும் தயார்” என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியுள்ள நிலையில், பெருந்தலைவர் காமராஜருக்கு கோவில்கள், நாத்திகம், கடவுள், வேண்டுதல்கள், புராணம், இதிகாசம், மதப் பண்டிகைகள்..ஆகியவை பற்றி எல்லாம் என்ன மதிப்பீடுகள் இருந்தன என்பதற்கு இதோ ஆதாரங்கள்; தலைவர் காமராஜரோடு நெருங்கி பழகியவர் சீர்காழி பெ.எத்திராஜ். ஒரு நெடிய பயணத்தில் அவர் காமராஜரோடு அருகிருந்து பார்த்தும், கேள்விகள் கேட்டும் பெற்ற விளக்கங்கள் இங்கே தரப்படுகிறது; தலைவர் காமராஜர் தஞ்சை மாவட்ட சுற்றுப்பயணத்தில் வந்தபோது ஒருபழம்பெருமை வாய்ந்த பாழடைந்த கோயிலை ...