அமோக வாக்கு பதிவு! பி.ஆர்.எஸ்கடைசி நேர தில்லுமுல்லுவில் ஈடுபட்டது! உண்மையில், மூன்று மாதத்திற்கு முன்பிருந்த நிலை முற்றிலும் வேறு! அது, கேசிஆரை வீழ்த்துவது முடியவே முடியாது என்ற தோற்றம்! ஆனால், இந்த மூன்று மாதத்தில் என்னவோ மாயாஜாலம் நடந்தது போல, காங்கிரசின் எழுச்சி சாத்தியமானது!  தேர்தலுக்கு முன்னும், பின்னுமான கருத்துக் கணிப்புகளும் காங்கிரசின் வெற்றியை உறுதிபடுத்துகின்றன! காங்கிரசின் வீரியமான பிரச்சார பலம், கள வேலைகள், அரசியல் ராஜ தந்திரங்கள், வியூகங்கள் போன்றவை மட்டுமல்ல, பி.ஆர்.எஸுமே தனக்குத் தானே தன் செயல்பாடுகள், பேச்சுக்கள் வழியே குழிதோண்டிக் ...