‘காதல் the core’ காதலின் உன்னதத்தை இப்படியும் சொல்லலாமோ..! ஒரு சண்டை சச்சரவு இல்லை! இருவரும் பரஸ்பர மரியாதையும், அன்பும் கொண்டுள்ளனர். எனில், இப்படிப்பட்ட தம்பதினர் ஏன் விவாகரத்து கோருகின்றனர்! பேசவியலாத விஷயத்தைக் கூட, சூட்சுமமாக காட்சி மொழியில் கடத்துவதே படத்தின் வெற்றி: இயக்குனர் ஜோ பேபி இயக்கியுள்ள இந்த மலையாளப் படம் பேசாப் பொருளை நுட்பமாகப் பேசுகிறது! இயக்குனரின் நயத்தக்க நாகரீக அணுகுமுறையாலும், மம்மூட்டி, ஜோதிகாவின்  பண்பட்ட தேர்ந்த நடிப்பாலும், விவாதமாக வேண்டிய  ஒரு கதையை அனைவரும் ஏற்கும்படி படைத்துள்ளனர். மாத்யூவும், ஓமனாவும் ...