”என்னுடைய இராமன், தசரதனின் மகனான – அயோத்தியின் அரசனான – இதிகாச இராமன் இல்லை. ..! அவன் நிரந்தரமானவன்” என்று சொல்லும் காந்தி, ”அந்த இராமனை நான் கோவிலில் தேடியதில்லை” என்கிறார்!  காந்தியின் ராமனுக்கும், பாஜகவினர் காட்டும் ராமனுக்கும் தான் எத்தனை பெரிய முரண்பாடுகள்..! காந்தியடிகள் மரணிக்கும் போது “ஹே ராம்” என உச்சரித்து கொண்டே தான் சாய்ந்தார். அவருடைய சிறு வயதிலிதிருந்தே பகவான் இராமர் ஒரு இன்றியமையாத பங்கினை , செல்வாக்கை செலுத்தி வந்தார். தன்னுடைய சுயசரிதையில் காந்தி இந்த செல்வாக்கை பற்றி ...