அரசியல் கட்சிகள் பெரு வியாபார நிறுவனங்களாக மாறி கோலோச்சுகின்றன! தலைவர்களே பிராண்ட் மாடல்கள்! 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சிகள் இயங்கிய விதத்திற்கும் இன்றைக்கும் மலையளவு வேறுபாடுகள் உள்ளன! இந்தச் சூழலின் உருவாக்கத்தையும், போக்குகளையும் அலசுகிறது இந்தக் கட்டுரை; மக்களாட்சியில் கட்சிகளின் தோற்றத்துக்கு தேவைகள் இருந்திருக்கின்றன. நாட்டு விடுதலைக்காக காங்கிரஸ் கட்சி உருவானது. அன்றைக்கு காங்கிரஸ் ஒரு வரலாற்றுத் தேவை! அந்த வரலாற்றுத் தேவையின் பின்னணியில் இந்திய வணிகர்கள் தங்கள் நலன் சார்ந்து இருந்தனர். அதில் தலைவர்களாக  இருந்த எல்லோரும் சொந்த செலவில் தான் ...