பூர்வீக காஷ்மீர் மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகின்றன. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு காஷ்மீரமே மெல்ல,மெல்ல களவாடப்பட்டு வருகிறது. சமூக தளத்திலும், அரசியல் தளத்திலும் காஷ்மீரிகளை அதிகாரமற்றவர்களாக்கி, அங்கே இந்துத்துவ த்தை கட்டமைக்கிறது பாஜக அரசு! ‘காஷ்மீரில் பா.ஜ.க.விற்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும்’ என்ற நோக்கத்தில் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் வியாபாரம், வேலை, கல்வி நிமித்தமாக ஜம்மு காஷ்மீரில் தங்கியிருக்கும் ஏறத்தாழ 20 முதல் 25 இலட்சம் வெளிமாநிலங்களை சார்ந்த மக்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. ‘அரசியல் அதிகாரத்தை ...