காஷ்மீர் மாநிலத்தின் 370 எனும் தனித் தகுதியை நீக்கியதை எதிர்த்த வழக்கில் தற்போதைய தீர்ப்பானது இந்திய வரலாற்றில் ‘கரும்புள்ளி’யாகும். மத்திய அரசின் ஏஜெண்டுகளான ஆளுனரோ, ஜனாதிபதியோ ஒரு மாநிலத்தை பிளக்கலாம், யூனியன் பிரதேசமாக்கலாம் என்பதை நியாயப்படுத்தவா.. உச்ச நீதிமன்றம்..?  இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் (Union of States)  என்ற அரசியல் சாசன விதியை மறந்த சக்திகள், மாநிலங்களை தங்கள் இஷ்டம் போல் துண்டாடி, ஒற்றை ஆட்சி முறைக்கு (Unitary State) இட்டுச் செல்ல இத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளதோ..என அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ...