கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயமுறுத்துகிறது! தொலைதூரப் பயணங்கள் என்பவை எளியோருக்கு எட்டாக்கனியாகி விடுமோ என அதிர்ச்சி ஏற்படுகிறது! உலகத் தரத்தில் படாடோபத்தைக் காட்டி நிற்கும் பேருந்து நிலையம், உள்ளூர் மக்களை பெரிதும் சிரமப் படுத்துகிறது! அடிப்படை திட்டமிடல் கூட இல்லை..! சென்னை அநியாயத்திற்கு விரிந்து பரந்து, பிதுங்கி வழிகிறது! ஐம்பது ஆண்டுகளில் ”ஐயோ கொடுமையே..” என்ற அளவுக்கு நெரிசல்கள்! தென் இந்தியாவில் சென்னை அளவுக்கு விரிந்தும், வீங்கியும் போய் கொண்டே உள்ள  மாநகரம் வேறில்லை. நகர விரிவாக்கம் என்பது எப்படி நரக விரிவாக்கமாக மாறி ...