மூச்சுவிட முடியவில்லை! இரும்பை உருக்கும் நாற்றம் குடலை புரட்டுகிறது! ஆலையின் புகையால் ஊரில் காணும் இடமெல்லாம் கருமை படிந்து கிடக்கிறது! செடிகள், இலைகள், நீர் நிலைகள், நிலமெல்லாம் கருந்துகள்கள்! வாழ்வாதாரத்தை அழிக்கும் தொழிற்சாலைகள், குவாரிகளின் பின்னணியில் ஆட்சியாளர்களா..? பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துவைத்துவிட்டு சற்று நேரம் கழித்து பார்த்தால் கருந்துகள்கள் மிதக்கின்றன! விவசாயக் கிணறுகள் எல்லாம் கருந்துகள்கள்! இதனால் ஊரில் உள்ள மூன்று கிணறுகளுமே மூலியாகிவிட்டன!ஊரில் கருந்துகள் படிந்த செடிகளை உண்டு ஆடு, மாடுகள் மடிந்து சாகின்றன! கடந்த சில ஆண்டுகளில் பல்லடம் தாலுகாவில் உள்ள ...