எந்தவித செலவும் இல்லாமல், மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி சாப்பிட்டாலே போதும், மஞ்சள் காமாலை விலகிவிடும். மஞ்சள்காமாலை வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. பொதுவாக பித்தம் அதிகரிக்கும் போது  வரும் இந்த நோய்க்கு கீழாநெல்லி என்ற இந்த மூலிகையைச் சாப்பிட்டாலே போதுமானது! கீழாநெல்லி மூலிகை பற்றி நம்மில் சிலருக்குத் தெரியும்; சிலருக்கு இது தான் என்று அடையாளம் காணத் தெரியாது. ஆனாலும், பலருக்கு அந்தப் பெயர் பரிச்சயமான ஒன்றே. அவ்வப்போது பெய்யும் சிறுமழையால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கீழாநெல்லி தாவரம் சாலையோரங்கள், வெட்ட வெளிகள், பூங்காக்கள் ...