கோவை சதாசிவம் கவிஞர், சூழலியல் செயல்பாட்டாளர். இதுவரை சூழலியல் குறித்து 25-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். ஒரு தாவரம், ஒரு பூச்சி, ஒரு விலங்கு கண்டால் போதும் இவர் கனிந்துருகும் வார்த்தைகளில் கவிதை  அன்புத் தேனாய் சொட்டும். முற்போக்குப் பாசறையில் கலைஞானம் மிக்கவர். தற்போது இப்படிக்கு மரம் என்று ஒரு கட்டுரை நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதையொட்டி அவர் நமக்கு அளித்த பேட்டி இது கவிதையாகவும், சிற்றருவி, பேரருவியாக கொட்டுகிறது. பூச்சி, புழுக்களின் ரீங்காரத்தையும் தாங்கி வருகிறது.  1990களிலேயே பின்னல் நகரம் என்றொரு கவிதைத் ...