சேரி என்பதை அவலத்தின் குறியீடாகப் பார்ப்பது அறியாமை! சங்கத் தமிழிலும், சரித்திரம் நெடுகிலும் சேரி பற்றிய குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன! எத்தனையோ சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் வாழ்ந்த இடமே சேரி! தில்லை நந்தனார் தொடங்கி, இளையராஜா வரை சொல்லலாம்..! உலகம் முழுவதிலும் சேரிகள் இருக்கின்றன. இருந்தாலும், தமிழகத்தில் மட்டும் தான் அது தலித்கள் வாழுகின்ற பகுதியாகவும், அவலத்தின் குறியீடாகவும் மேட்டிமைவாதிகளால் அடையாளப்படுத்தப்படுகின்றது. “விஜயநகர பேரரசுக்கு பிறகு தான் சேரி என்பது குல விலக்கம் செய்யப்பட்டவர்களின் கூடாரமாகவும், ‘தலித்’கள் வாழுகின்ற பகுதியாகவும் மாற்றப்பட்டது. இன்றைக்கு நாம், ...