அறிவியல் பூர்வமான கல்வியை காலி செய்து, புராண, இதிகாசம் சார்ந்த கல்வியை திணிப்பதாக தேசியக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது. எல்.கேஜி தொடங்கி எம்.பி.பி.எஸ், ஐ.ஏ.எஸ் வரை அனைத்து நிலை பாடத் திட்டத்தையும் பார்ப்பனிய, சனாதனக் கண்ணோட்டத்தில் மாற்றியுள்ளனர். விரிவான அதிர்ச்சி ரிப்போர்ட்! சின்னஞ்சிறு குழந்தையின் கல்வி முதல் மிகவுயர்ந்த ஆய்வுகள் வரை அனைத்தும் ஒன்றிய அரசின்       கட்டுப்பாட்டிற்குள் கொண்டு போகின்றனர். இதில்  “தேசிய அடித்தள நிலைக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு” அவற்றின் முதல் இரு முக்கிய அத்தியாயங்கள் குறித்து ஆய்வு செய்வதே ...