பல அநீதிகளைத் தட்டிக் கேட்ட, சமூக நீதிக்காக பேசிய சவுக்கு சங்கரின் கைது, ”நியாயமா? அநியாயமா?” என பலமாக விவாதிக்கப்படுகிறது! இதற்கான பதிலை ஒற்றை வரியில் சொல்ல முடியாது. தனி நபர் சார்ந்து பார்க்க வேண்டிய விவகாரமல்ல, இது! சற்று ஆழமான புரிதலோடு அணுக வேண்டிய விவகாரமாகும்! இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவசரப்பட்டு உள்ளது! ”இந்தக் கைது ஏற்புடையதல்ல” என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். சவுக்கு சங்கர் கைதின் வழியாக ஜனநாயகத்திற்கான வெளியை  நீதிமன்றம் முற்றிலும் முடக்க முன்னெடுக்கும் வாய்ப்புகள் தொடர ஒரு போதும் ...