இந்திய ஆட்சிப் பணியும் சினிமாவும் மற்றும் நானும்- ஞான ராஜசேகரன் இந்த நூலில் ஞான ராஜசேகரன் அவர் கேரளாவில் மாவட்ட ஆட்சியராக இருந்த போது சந்திக்க நேர்ந்த சிக்கலான பிரச்சினைகளையும், அதற்கு தான் காண்ட தீர்வுகளையும் சுவைபடக் கூறியுள்ளார். அதே போல அவர் இயக்கிய புகழ் பெற்ற திரைப்படங்களின் உருவாக்க அனுபவங்களையும் வெகு சுவாரஷ்யமாக எழுதியுள்ளார்.  ஞான ராஜசேகரன் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும்போதே , கேரள அரசின் சிறப்பு அனுமதியைப் பெற்று முத்திரை பதித்த திரைப்படங்களை இயக்கியது சாதனையே. திரைப்படத் தணிக்கை துறை அதிகாரியாகவும் ...