உலகின் பல நாடுகளில் தற்போது கூலிக்கு வேலையை முடித்துக் கொடுக்கும் தனியார் ராணுவங்கள் செயல்படுகின்றன! மனித உரிமை மீறல்களுக்கு செளகரியமாக உள்ள இந்த ஏற்பாடு அரச வன்முறைகளுக்கு வலு சேர்க்கின்றன! உலகில் பல நாடுகளில் செயல்படும் தனியார் ராணுவங்கள் குறித்து பேசுகிறது இந்தக் கட்டுரை! ரஷ்ய யுத்தம் மேலும் ஒரு புதிய ஆபத்தின் வளர்ச்சி போக்கை வெளிப்படுத்தி உள்ளது. அதுதான் தனியார் ராணுவ கூலிப்படையாகும். முதலாளித்துவ வளர்ச்சி கட்டத்தில் தேசிய அரசுகள் உருவாகாத சூழலில் பலரும் படைகளை பராமரித்தனர். கிழக்கு இந்திய கம்பெனி தனது ...