இந்த ஆண்டு பல்லக்கு பவனியை மிகக் கோலாகலமாக பாஜக தலைவர்களை வைத்து நடத்தியுள்ளனர்! ஆனால், 2020 ஆம் ஆண்டு இதே தருமை ஆதினம் பல்லக்கு விவகாரத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாக பின்வாங்கி பல்லக்கை தவிர்த்து,காரிலும் நடந்துமாகச் சென்றார்! அதிமுக ஆட்சியில் எதிர்ப்புக்கு பணிந்தவர், திமுக ஆட்சியில் சாதித்தது எப்படி? நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம். இந்த ஆண்டு இது வரையிலும் இல்லாத அளவுக்கு வெகு விமரிசையாக பட்டிணப் பிரவேசம் எனப்படும் பல்லக்கு பவனியை நடத்தி காட்டியுள்ளது. ஊரே திணறிப்போகும் அளவுக்கு பிரமாண்ட ...