சந்தோஷம் கொள்ள வேண்டிய பண்டிகையை சங்கடப்படுவதாக நமக்கு நாமே மாற்றிக் கொள்கிறோம். எத்தனையெத்தனை தீ விபத்துகள், காயங்கள், காற்று மாசுபடல்கள்! நச்சுக் காற்று மண்டலத்தில் நகரங்கள் நரகங்களாகின! சிலர் சக்கரை வியாதிக்கு வரவேற்பு தரும் விழாவாகவும் இதை மாற்றிவிடுகின்றனரே! தீபாவளி திருநாள் நச்சுப் புகை மண்டலம் தமிழகத்தை மாத்திரம் அல்ல, இந்தியாவில் தில்லி தவிர்த்த அனைத்து மாநிலங்களையும் நச்சு புகை மண்டலத்தில் ஆழ்த்திவிட்டது! பட்டாசு வெடிப்பு காரணமாக சென்னையில் மட்டும் 180 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளன . தமிழ்நாடு முழுக்க பார்த்தால் 280 ...