தென்னாப்பிரிக்காவில் காந்தி என்ற நூல் புதியதாக காந்திப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்ற முனைப்போடும் இதுவரை பலரின் கவனத்தில் இருந்து தப்பிய அரிய தகவல்களை ஆதாரபூர்வமாக கொண்டும்  எழுதபட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் பிரபல வரலாற்றாய்வாளர் ராமச் சந்திர குஹா எழுதிய Gandhi before india என்ற நூலை மிகச் சிறப்பாக தமிழுக்கு தந்துள்ளார் சிவசக்தி சரவணன். காந்தி ஒரு மக்கள் தலைவராக உருப்பெற்றது தென்னாப்பிரிக்காவில். அதன் பிறகு இந்தியாவில் வெற்றிகரமாக அவர் 30 ஆண்டுகள் நடத்திய போராட்டங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக அமைந்தது தென்னாப்பிரிக்காவில் அவர் ...