இந்தியாவில் பிறந்திருந்தாலும் காந்தி மகாத்மாவாக பரிணமித்த இடம் தென்னாப்பிரிக்கா தான். இனப் பாகுபாட்டிற்கு எதிராக காந்தி நடத்திய போராட்டங்கள் இன்றைக்கும் தென்னாப்பிரிக்க மக்களை வழி நடத்துவதை கண்கூடாக பார்த்தும், காந்தி நடமாடிய இடங்களை கண்டு நெகிழ்ந்தும் திரும்பியுள்ள காந்தி கல்வி நிலையத்தின் மோகன் நேர்காணல்; ஆசிரம வாழ்க்கை, கூட்டு வழிபாடு, பெண்களை போராட வைப்பது, இந்து – முஸ்லிம் ஒற்றுமை என காந்தி இந்தியாவில் உருவாக்கியதை நாம் அவரது தென்னாப்பிரிக்க வாழ்க்கையிலேயே காணமுடியும். தென்னாப்பிரிக்கா செல்வதை காந்தியர்கள் புனிதயாத்திரையாக கருதுகிறார்கள். சமீபத்தில் அங்கு பயணம் ...