நான்கு மாநில ரிசல்டில் தெலுங்கானாவைத் தவிர மூன்றில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது! உண்மையில் இங்கெல்லாம் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான சூழல்கள் இருந்தும், வெற்றி கை நழுவிப் போனது! இன்னும் சொல்வதென்றால், மூன்று மாநிலங்களில் பாஜகவிற்கு காங்கிரஸே வெற்றியை தூக்கி கொடுத்துள்ளது! மத்திய பிரதேசத்தில் ஐந்தாவது முறையாகத் தொடர்ந்து பாஜகவிடம் வெற்றியை பறி கொடுத்துள்ளது காங்கிரஸ்! பாஜக ஆட்சி குறித்து கடுமையான அதிருப்தி நிலவிய மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு சாதகமான அம்சங்கள் நிறையவே தென்பட்டன! ஆனால், மக்கள் அதிருப்தியை சிந்தாமல், சிதறாமல் வென்றெடுப்பதில் ...