அரசுப் பணியை லஞ்சம் இல்லாமல் பெறுவது  பெரும் சவாலாகும். அமைச்சர்களும், ஆளும்தரப்பு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஈவு இரக்கமில்லாமல் பணம் புடுங்கின்றனர். பேராசிரியர் பணிக்கு பல லட்சங்களா? லஞ்சப் பேர்வழிகளுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது, பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள் நியமனங்களில்; முழு விவரம்; தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் நிர்வாகத்தில் மொத்தம்  333 கலை,அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 171 அரசு கல்லூரிகளும் 162 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு அரசு தான் ...

அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பேராசிரியர் பணி இடங்களை கல்லா கட்டும் காமதேனுவாகப் பார்க்கிறார்கள் ஆட்சியாளர்கள்! ‘பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளின் பணியிடங்களை நிரப்ப, பணம் தராவிட்டால் அனுமதி இல்லை’ என அலைக்கழிப்பு! காசு,பணம், துட்டு! இல்லையெனில், நடையைக் கட்டு.. அமைச்சரின் அடாவடி! தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய அறக்கட்டளையாக பல்லாயிரம் கோடி பெறுமான சொத்துக்களோடு திகழும் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ்  பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி, செல்லம்மாள் கல்லூரி உள்ளிட்ட ஆறு கல்வி நிறுவனங்கள் வாயிலாக பல லட்சம் ஏழை மாணவர்கள் ...