அதிகாரிகள் கையில் முழு அதிகாரம் தந்தால் என்னமாக ஆட்டம் போடுவார்கள் என்பதற்கு பறக்கும் படை என்ற பெயரில் சாதாரண மக்களிடமும், எளிய வியாபாரிகளிடமும் இவர்கள் நாள்தோறும் காட்டும் அணுகுமுறைகளே சாட்சியமாகும். அரசியல்வாதிகளை சுதந்திரமாக பணம் எடுத்து செல்லவிட்டு மக்களை தான் பிடிக்கிறார்கள்..! தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் மற்றும் 702 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுக்கள் எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 24 ...