‘புதிய குற்றவியல் சட்டங்கள் ஆபத்தானவை! காவல் துறைக்கு கட்டற்ற அதிகாரம், மனித உரிமைகளை நசுக்கும் கூறுகள், அதிகாரத்தில் உள்ள குற்றவாளிகளை பாதுகாப்பது ஆகிய அம்சங்களோடு தடா, பொடா, ஊபா சட்டங்களின் கலவையாக உள்ளன, புதிய சட்டங்கள் ‘ என அம்பலப்படுத்தியது பியூசிஎல்; மோடி 2.0 ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய குற்றவியல் சட்டங்கள் மொழி பெயர்க்கப்படவில்லை, தடா,பொடா, ஊபா சட்டப் பிரிவுகள் புதிய குற்றவியல் சட்டங்களில் ...
அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்ட புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது பாஜக அரசு! தேசத் துரோக குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான தண்டனையாம்! ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைக்காவிடில் நீதிபதியே கூட கைதாகலாமாம்! மக்களாட்சியை சிதைத்து மன்னராட்சியாக்கவா சட்டங்கள்? இ.பி.கோ. என இந்திய நாட்டு மக்களால் பெரிதும் அறியப்பட்ட இந்திய தண்டனைச்சட்டம் Indian Penal Code (IPC), இந்திய சான்று சட்டம் (Indian Evidence Act) மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் Criminal Procedure Code (CrPC) ஆகிய மூன்று சட்டங்களை ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாக பாரதீய நியாய ...