நஞ்சானது விவசாயம்! நலம் குன்றியது வாழ்க்கை! பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவுகதிகமான பயன்பாடுகள் அதிர்ச்சி தரும் விளைவுகள்! அரசுகளோ கார்ப்பரேட்டுகளின் கைப்பாவை! பெரு நிறுவனங்களின் லாபம், விவசாயிகளின் சோகம்! கலங்கடிக்கும் சுற்றுச் சூழல் ஒரு பார்வை! 60 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் செலவில்லாத ஒர் தொழிலாக இருந்தது விவசாயம்! விதை, உரம், தண்ணீர்,பூச்சிவிரட்டி எதற்கும் செலவில்லாமல் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட தொழிலாக விவசாயம் இருந்தது.உணவு என்பது முற்றிலும் இயற்கையின் கொடை! பருவகாலம் அறிந்து பயிர் செய்வது ஒன்றே மனிதனின் கடமை என்பதாக இருந்தது! ...