வீரத்தின் விளை நிலமாய் திகழ்ந்த மருது சகோதர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்ட பிறகு, சின்ன மருதுவின் மனைவி, மருமகள் ஆகியோர் அன்றைய நீதிமன்றங்களில் கோலோச்சிய சனாதன வழிகாட்டுதலில் சந்திக்க நேர்ந்த துயரங்களை விவரிக்கிறது இந்தக் கட்டுரை! அண்மையில் மருது பாண்டியர்களின்  நினைவு நாள் தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக மக்களால் கொண்டாடப்பட்டது . அவர்களது வீரமும், தியாகமும் , விடுதலை வேட்கையும் என்றும் மறக்க இயலாதவை . அதோடு கூடவே அவர்களின் மறைவுக்குப் பிறகு  அதைத் தொடர்ந்து நடந்த சில சோக சம்பவங்கள்  பலராலும்  அதிகம் அறியப்படாத வரலாறு! அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு ...