கள்ளக் குறிச்சி மகாபாரதி பொறியியல் கல்லூரியில் தலித் மாணவன் மர்ம மரணம் அடைந்து ஒரு வாரமாகிறது! செய்தி வராமல் தடுக்க பெரும் பணபலமும், அதிகார பலமும் பிரயோகிக்கப் படுகிறது! ஒரு பெண்ணைக் காதலிப்பதாக சந்தேகப்பட்ட கல்லூரி நிர்வாகமும், ஆசிரியர்களும் அவனை கடுமையாக துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது…! சின்னசேலம் அருகே உள்ள அ.வாசுதேவனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார்., மாணவன் அபித்குமார். இவர் ஆகஸ்ட் 18- அன்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மாணவனின் தந்தை ...