திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவி நந்தினி ப்ளஸ் டூ தேர்வில் முழுமையாக 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். முக்கிய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் கொண்டாடுகிறார்கள். ஆனால், யாரும் அந்த மாணவிக்கு புதுமைப் பெண் திட்ட உதவியை ஏன் வழங்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பவில்லை? புதுமைப்பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை ...