டி.எம்.கிருஷ்ணாவிற்கான சங்கீத கலாநிதி விருது சர்ச்சையானதில், பெரியார் தான் பார்ப்பன சமூகத்தின் ‘டார்கெட்டாகி’யுள்ளார்! கிருஷ்ணாவை ஆதரித்து பொதுச் சமூகமே வாள் சுழற்றிக் கொண்டுள்ளது. ஆனால், தன்னை முன்னிட்டு, பெரியார் தாக்கப்படுவது குறித்து, தற்போது வரை கிருஷ்ணா கள்ள மெளனம்  சாதிப்பதன் பின்னணி இது தான்; கிருஷ்ணாவிற்கு விருது வழங்கப்படுவதை சாக்காக வைத்து தான் பெரியார் பெரிய அளவில் தாக்கப்பட்டு வருகிறார்! பெரியார் இனப் படுகொலை செய்யத் துண்டியதாக அபாண்ட பழி சுமத்துகிறார்கள். மீண்டும், மீண்டும் இந்தப் பழியை ரஞ்சனி, காயத்திரி, துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ...