‘இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்’ என்ற நூல் இந்த காலகட்டத்திற்கான ஒரு அவசியத் தேவை! கருணையற்ற கார்ப்பரேட் மருத்துவத்திடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் சகல வழிமுறைகளையும் எளிமையாக விளக்குகிறது! நோயாளிகள் மட்டுமல்ல, மருத்துவர்களும் வாசிக்க வேண்டிய நூலாகும்! இன்றைக்கு நாம் சந்திக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று மருத்துவ தொழிலில் மனிதாபிமானமற்ற நிலைமையாகும். மருத்துவத்தை லாபம் கொழுக்கும் வணிகமாக பார்க்கும் மனநிலைக்கு நவீன சமூகம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. வணிகத்தில் கடை பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நெறிமுறைகளைக் கூட பின்பற்ற மறுத்து நோயாளிகளை ஏமாற்றியும், அறியாமைக்குள் ...