தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ளாராம்! “தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப் பெரிய பாய்ச்சல்” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார்! உண்மை தான்! ஆனால், இது பின்னோக்கிய பாய்ச்சல்! இந்தக் கட்டுரை தற்போதைய தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிரான கட்டுரை என்று வாசகர்கள் உடனடி முடிவுக்கு வந்துவிட வேண்டாம். ஏனென்றால், ‘இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் பல மாநிலங்களில் நடப்பதே..’ என முழுமையாகப் படித்து முடிக்கும் போது ...