தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினைகளை சற்றுக் கூடுதலாகவும், விவரமாகவும் பேசி கருத்தை கவருபவர் சீமான்! திமுகவும், அதிமுகவும் நீர்த்துப் போய், அம்பலமான நிலையில், மக்கள் புதிய ஒரு அரசியல் கட்சியை எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்பார்ப்பிற்கு தக்கவராக சீமான் தோற்றம் காட்டுகிறார்! ஆனால், அவர் நம்பகத்தன்மையானவரா? தன்னை ஒரு சாதியவாதியாகவும், ஆர்.எஸ்.எஸ்காரனாகவும் வெளிப்படுத்திக் கொண்டு, பாஜகவின் வளர்ச்சியே தன் ஊடகச் செயல்பாட்டின் அடித்தளம் என்று எப்போதும் பொய், புரட்டுகள் பேசி பிழைப்பு நடத்தும் ரங்கராஜ் பாண்டே, ”ஈரோடு கிழக்கு தேர்தலில் நாம் தமிழர் கட்சி திமுக, அதிமுகவை ...