ஆறுகளைத் தேடி – 6 பச்சை நிற மலைகளுக்கும், நீல நிறக் கடலுக்கும் இடையில் ரத்த நாளங்களை போல வெள்ளி நிற நீரோடைகள் பாய்ந்தோடும் ஒரு அழகிய நிலப்பரப்பு குமரி மாவட்டம்! மலைகள், அருவிகள், ஓடைகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், வயல் வெளிகள், பாக்கு, தென்னந் தோப்புகள், நீரோடும் வாய்க்கால்கள், கடற்கரையோர பொழிமுக பகுதிகள், அலையாத்திக் காடுகள் என ஒட்டு மொத்தமாக இயற்கையின் அழகை ஒரே இடத்தில் காண முடியும். என்றும் இளமையாக இருக்கும் ஓர் நிலப் பரப்புக்கு குமரி என்று பெயர் வைத்தவர்கள், ...