இருபது அரசியல் கட்சிகள் EVM வாக்களிப்பை எதிர்க்கின்றன. EVM முறையில் நேர்மையான வாக்கு பதிவு சாத்தியமா..? கடந்த தேர்தலின் கசப்பான அனுபவங்கள், தேர்தல் ஆணைய தலைமை அதிகாரிகளின் நியமனங்கள், அவர்கள் செயல்படும் விதம் யாவும் மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது…என்ன செய்யலாம்..? 2019 தேர்தலில் சில சாம்பிள் சர்வே செய்ததிலேயே இ.வி.எம்.மில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டது-  350க்கும் மேலான தொகுதிகளில்! இதை சாதாரணத் தவறாக கடந்து போக இயலுமா? குறுக்கு வழியில் கோல்மால்களை செய்து அதிகார நாற்காலியை அடையத் துடிக்கும் பாஜகவுக்கு ...