அரசியல் தலைவர்களை முடிக்க, அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் மெல்ல,மெல்ல ஸ்லோ பாய்சன் தருவது  அல்லது அவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் பொழுது,  அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமலோ அல்லது தவறான சிகிச்சை அளித்தோ முடிப்பது. இந்த வழி முறைகளுக்கும் இந்த மூவரின் சாவுக்கும் என்ன தொடர்பு..? 2016 ல் பிரபல பத்திரிக்கையாளர் NDTV பிரனாயிராய்க்கு விஜயகாந்த் தந்த ஒரு நேர்காணலில், ”உங்கள் மீது அதிகமாக குடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது” என்று கேட்கபட்டதற்கு விஜயகாந்த், ”இது ஒரு பழைய குற்றச்சாட்டு.   இப்போதெல்லாம் நான் குடிப்பது இல்லை ...