இயற்கையான நீர் நிலைகளை அழித்து உருவாக்கப்பட்ட சென்னை மாநகரம் பெருமழை பெய்யும் போது மிதக்கிறது!  434 ஏரி, குளங்களை விழுங்கி இந்த பெரு நகரம் உருவானது. இந்த அத்தனை பகுதிகளும் மழை, வெள்ளம் வரும் போது அல்லோகலப்படுகின்றன! மயிலை நாகேஸ்வரராவ் பூங்கா ஏன் மிதக்கிறது? நூறாண்டுகளுக்கு முந்திய கணக்கின்படி சென்னையில் 474 நீர் நிலைகள் இருந்துள்ளன என்றால், நம்ப முடிகிறதா? இன்று அவற்றில் பத்து சதமான நீர் நிலைகள் கூட உயிர்ப்புடன் இல்லை என்பது வளர்ச்சியா? வீழ்ச்சியா? சென்னையின் மையப் பகுதியில் உள்ள மயிலாப்பூர் ...