மவுனித்து இருப்பது, மறைமுகமாக செல்வாக்கான கொலை குற்றவாளிக்கு உதவுவது, அரசு நிர்வாகத்தை இந்த அநீதிக்கு அரண் தந்து நிறுத்துவது என்பதில் ஸ்டாலின் தீவிரம் காட்டுகிறார்! மாணவி எழுதப்பட்டதாக சொல்லப்பட்ட கடிதம் போர்ஜரி என்பது தற்போது தடயவியல் துறை மூலம் அம்பலப்பட்டுவிட்டது. கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தில் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பே அவசரப்பட்டு நீதிபதி கைது செய்யப்பட்டிருந்த பள்ளிக் கூட நிர்வாகிகளுக்கு ஜாமீன் கொடுத்தார்! கொடுத்ததோடு நில்லாமல், பள்ளி நிர்வாகிகளுக்கு நற்சான்றிதழ் பத்திரமும் வாசித்தார். கூடுதலாக நீதிபதி, மாணவியின் கடிதம் ...