உணவை எடுத்துக் கொண்டு பறக்கிறார்கள்! பதட்டத்துடன் ஓடி டெலிவரி செய்கிறார்கள்! அவர்கள் எதைச் சாப்பிடுகிறார்கள்? இயற்கை உபாதைகளை எப்படி எதிர் கொள்கிறார்கள்? தினமும் 12 மணி நேரம் சாலையிலேயே வாழ்க்கை கழிகிறது! ஸ்விக்கி, ஓலோ, உபர், ஜொமட்டோ.. எல்லாமே உழைப்பு சுரண்டாலாக உள்ளது! இப்படி ஓடி,ஓடி உழைப்பவர்கள் அடிமாட்டுச் சம்பளத்திற்காக உழைத்து, ஆறேழு வருடங்களில் எந்த வேலைக்கும் லாயக்கில்லாதவர்கள் ஆகி விடுகிறார்கள்! இந்திய ஒன்றிய அரசு சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா சட்டங்களில் இருந்தும் விதிவிலக்கு அளித்திருக்கிறது, பாஜக ஆட்சிக்கு வந்தது தொடங்கி, தொழிலாளர் ...